வவுனியா கணேசபுரத்தில் வீடு முற்றாக எரிந்து, பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சாம்பல்!!(படங்கள்)

502

வவுனியா மரக்காரம்பளை வீதி, கணேசபுரத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சாம்பலாகியுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா மரக்காரம்பளை வீதி, கணேசபுரத்தில் வசிக்கும் யதுகரன் லலிதா அவர்களின் வீடு நேற்று முன்தினம் காலை சாமிப் படத்துக்கு ஏற்றிய விளக்கினால் பரவிய தீ காரணமாக முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

வீட்டின் உரிமையாளரான லலிதா அவர்கள் தனது வீட்டின் சாமி படத்திற்கு விளக்கு வைத்துவிட்டு தனது 7 வயது நிரம்பிய மகளான கலைவாணியை நெளுக்குளம் பாடசாலையில் சேர்ப்பதற்காக சென்றிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கலைவாணிக்கு 03 வயதாகும் போதே தந்தை யதுகரன் 2007ம் ஆண்டு தவசிகுளத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்க்கையைக் கொண்டு சென்ற லலிதாவின் குடும்பத்த்துக்கு அவரது வீடும் எரிந்தமையானது பேரிடியாக அமைந்துள்ளது.



இந்நிலையில் அங்கு சென்ற புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை முன்னாள் உப தலைவருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத்தலைவரும் சமூக சேவையாளருமான சந்திரகுமார் (கண்ணன்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் ஜோச் வாசிங்டன், சமூக ஆர்வலர்கள் கேதீஸ், ஜெகதீஸ், ஆனந்தன் ஆகியோர் நிலைமைகளைப் பார்வையிட்டு, அதிரடி இணையத்தின் உதவியைக் கொண்டு லலிதாவின் குடும்பத்தின் அவசியத் தேவைகளுக்குரிய பொருட்களையும் நிதியுதவியையும் வழங்கியுள்ளனர்.

1 2 3