வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும்!!

212


வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில்..


வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் இன்று (25.11.2019) காலை இடம்பெற்றது.பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை பிரதம , சிறப்பு விருந்தினர்களினால் திறந்து வைக்கப்பட்டது.


அதன் பின்னர் பாடசாலை முன்றலிருந்து அதிதிகள் பாண்ட் மற்றும் மாணவர்களின் நடனத்துடன் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.


வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் மாணவர்களின் நடனம் இடம்பெற்றதுடன் பரிசளிப்பு நிகழ்வும் , சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் தியாகசோதி யுவராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண மாகாணக்கல்வித் திணைக்கள பிரதிக்கல்வி பணிப்பாளர் ஆ.சு.சற்குணராஜா,

சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன், கௌரவ விருந்தினராக வவுனியா தெற்கு ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ச.முரளிதரன்,

மற்றும் விருந்தினர்களாக அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.