கொழும்பில் வெள்ளம் : வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் : போக்குவரத்து பாதிப்பு!!

573

கொழும்பில் வெள்ளம்

கொழும்பில் இன்று பிற்பகல் பெய்த கடும் மழையின் காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்றிலிருந்து இலங்கையில் பெரும்பாலான இடங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் தொடர் மழை : வெள்ளத்தில் மூழ்கிய இந்துக் கல்லூரி!!

கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி வளாகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

நேற்றிரவிலிருந்து தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு நிலையும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கிளிநொச்சியில் உள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.