உலக சாதனைக்காக 745 பேர் நிர்வாணமாக நீச்சல்!!

624

Swiming

நியூசிலாந்து நாட்டில் நிர்வாணமாக நூற்றுக்கணக்கானோர் கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளனர். வடகிழக்கு நியூஸிலாந்­திலுள்ள கிஸ்போர்ன் கடற்கரையில் ஒரே சமயத்தில் 745 பேர் நிர்வாணமாக நீச்சலடித்து சாதனை படைத்திட முடிவு செய்து அதற்கான முயற்சியிலும் இறங்கினர்.

கிஸ்போர்ன் கடற்கரையில் ஒரே சமயத்தில் ஆண்களும்,பெண்களுமாக குவிந்த அவர்கள் நிர்வாணமாக நீச்சலடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் அதனை உலக சாதனையாக அறிவித்திடவும், கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டில் பதிவுசெய்ய உள்ள தினத்தையும் எதிர்பார்த்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டை சார்ந்த சேர்ந்த 729 பேர் நிர்வாணமாக நீச்சலடித்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தி காட்டினர். அவர்கள் மேற்கொண்ட சாதனையை முறியடிக்கும் வகையிலேயே நியூசிலாந்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதாம்.