கவலைக்கிடமான நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர்!!

1


பாலா சிங்


தமிழ் சினிமாவில் பல குணசித்திர வேடங்களில் நடித்த பிரபலமான பாலா சிங் உடநிலை கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தமிழ் சினிமாவாலும், மேடை நாடகங்களாலும் பிரபலமானவர் பாலா சிங். நாசரின் இயக்கத்தில் வெளியான அவதாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.


புதுப்பேட்டை விருமாண்டி படங்களின் மூலம் மக்கள் மனத்தில் இடம் பிடித்த பாலா சிங் தற்போது காய்ச்சல் மற்றும் மூச்சுதிணறலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை கவலைகிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்தாண்டில் மட்டும் இதுரை என்.ஜி.கே, மகாமுனி உட்பட ஐந்து திரைப்படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார். அவர் பூரண நலமுடன் வீடு திரும்ப ரசிகர்களும் குடும்பத்தாரும் காத்திருக்கின்றனர்.