வவுனியா மாணவர்கள்
அண்மையில் இடம்பெற்ற தேசிய கணித விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் சித்திபெற்ற வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய மாணவன் செல்வன் மயூரன் .யதுர்சன் மற்றும் வவுனியா இறம்பைக்குளம் மகிளீர் வித்தியாலய மாணவி செல்வி .எஸ்.சப்தகி சர்வதேச ஒலிம்பியாட்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.
தேசிய ரீதியில் சித்திபெற்று சாதனை படைத்த மாணவர்கள் குழு சர்வதேசரீதியில் வியட்நாமில் இடம்பெறும் போட்டியில் பங்கு பங்குபற்றுவதற்காக சென்றுள்ளனர் .மேற்படி குழுவில் வவுனியாவை சேர்ந்த இரு மாணவர்களும் சர்வதேச போட்டியில் பங்குகொள்வதற்காக 25.11.2019 அன்று வியட்நாம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பு பட்ட செய்தி : வவுனியா மாணவர்கள் தேசியரீதியில் கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாதனை!!