தொடரும் சோகம் : ஐ.பி.எல்.போட்டிகளில் ஷேவாக்கை கைவிட்டது டெல்லி அணி!!

530

Sewagஏழாவது ஐ.பி.எல்.போட்டிகளுக்கான வீரர்கள் தெரிவில் கெவின் பீற்றர்சன், விரேந்தர் ஷேவாக் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரை டெல்கி டெயார் டெவில்ஸ் விடுவித்துள்ளது.

இதன்படி அவர்களை அணியில் இணைத்துக் கொள்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்கள் மூன்று பேரும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ம் திகதி நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தில் கலந்துக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மும்பை இந்தியன்ஸ் அணி தமது இரண்டாவது வெளிநாட்டு வீரராக லசித் மலிங்கவை தெரிவு செய்துள்ளது.

ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளின் கிரன் போலார்டை அந்த அணி தெரிவு செய்திருந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் மிட்சல் ஜோன்சன் மற்றும் இலங்கையின் லசித் மலிங்க ஆகியோரில் யாரை தெரிவு செய்வது என்று ஆலோசிக்கப்பட்டு வந்தது.

லசித் மலிங்கவின் அண்மைக்கால திறமை வெளிப்படுத்தலின் அடிப்படையில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி கைவிடலாம் என்று கருதப்பட்ட போதும், அவரையே மீண்டும் இணைத்துக் கொள்ள அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.