நடிகை த்ரிஷாவுக்கு கைது வாரண்ட் ஏன் : வழக்கறிஞர் விளக்கம்!!

730

Trisha

நடிகை த்ரிஷாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கவில்லை என்று வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை த்ரிஷா ஹொட்டல் அறை ஒன்றில் குளிப்பது போன்ற காட்சியொன்று 2004ம் ஆண்டு இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் த்ரிஷாவும், அவரது தாய் உமாவும் இதனை மறுத்தனர். படத்தில் இருப்பது த்ரிஷா இல்லை என்றும் மாபிங்கில் போலியாக இப்படத்தை உருவாக்கி இருப்பதாகவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் படத்தை வெளியிட்ட வார பத்திரிகையிடம் நஷ்டஈடு கேட்டு உமாகிருஷ்ணன் எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்தது. விசாரணைக்கு வருமாறு உமாகிருஷ்ணனுக்கு நீதிமன்றம் பல தடவை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து நீதிபதி கோபாலகிருஷ்ணன் த்ரிஷாவுக்கும், உமாகிருஷ்ணனுக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது.

இதனை உமாகிருஷ்ணனின் வழக்கறிஞர் மறுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்..

நீதிமன்றம் த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கவில்லை. அவரது தாய் உமாகிருஷ்ணனுக்கு மட்டுமே வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனறும் இதற்கு சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறியுள்ளார்.