டிக் டாக்கில் கலக்கிய 7 வயது சி றுமி : கொ லை செய்த தாய் : அம்பலமான உண்மை!!

293

7 வயது சிறுமி

ஆந்திர மாநிலத்தில் பள்ளியிலிருந்த 7 வயது மகளை தூக்கிக்கொண்டு கொ லை செய்துள்ள தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகில் உள்ள பகடாலபேட்டையில் வசித்து வந்த சதீஷ்குமார், சத்யவேணி தம்பதிகளுக்கு ஒரே மகள் தீப்திஸ்ரீ(7).

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீப்தியின் அம்மா சத்யவேணி இ றந்துவிட்டதால் அவரது தந்தை அதே பகுதியைச் சேர்ந்த சாந்தகுமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்துள்ளது.

தனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு வரை தீப்தியை நன்றாக பார்த்துக்கொண்ட சாந்தகுமாரி, குழந்தை பிறந்த பின்பு தீப்தியை அடித்தும், சூ டுவை த்தும் கொ டுமைப்படுத்தியுள்ளார்.

இதனை ஒருநாள் அவதானித்த சதீஷ்குமாரின் தாய், பேத்தி தீப்தியினை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று படிக்கவைத்துள்ளார். தனது குழந்தையை வளர்ப்பதற்கு தாய்க்கு மாதம் மாதம் சதீஷ் பணம் கொடுத்துள்ளார்.

இதனையறிந்த மனைவி கணவரிடம் ச ண்டையிட்டதால் தாய்க்கு கொடுத்த வந்த பணத்தினை நிறுத்தியுள்ளார். இதனால் இவர்களின் பஞ்சாயத்துவரை சென்றதில் குழந்தையை வளர்ப்பதற்கு மாதம் ரூ. 2000 தனது தாய்க்கு சதீஷ் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

பாட்டி வீட்டில் சந்தோஷமாக இருந்த தீப்தி டிக் டாக்கில் கவனம் செலுத்தி தனது நடிப்புத்திறமையைக் காட்டியுள்ளார். இதனை அவதானித்த ஊர் ஜனங்கள் தீப்தியின் திறமையைப் பாராட்டி வந்துள்ளனர்.

ஆனாலும் தனது கணவர் கொடுக்கும் பணத்தினை தடுக்கமுடியாத மனைவி சாந்தகுமாரி, பள்ளியிலிருந்த தீப்தியை அவசர அவசரமாக அழைத்து ஏரிக்கரைக்கு கொண்டு சென்று, க ழுத்தை கட்டியில் ஏ ரியில் தூக்கிவீசிவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனை அறியாத தீப்தியின் அப்பா, பாட்டி இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பொலிசாரின் தேடுதலில் சாக்குமூட்டையில் ச டலமாக மீட்கப்பட்டார் தீப்தி. பின்பு பள்ளியின் அருகே இருந்த கண்காணிப்பு க மெராவை ஆய்வு செய்ததில் தீப்தியை சாந்தகுமாரி அவசர அவசரமாக தூக்கிக்கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.

சாந்தகுமாரியிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் தான் கொ லை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து, தற்போது சாந்தகுமாரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.