திருமணத்திற்கு பின் என் வாழ்வில் நடந்த மாற்றம் : மனைவி குறித்து மனம் திறந்த டோனி!!

3


மனம் திறந்த டோனி


இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி திருமணத்திற்கு பின் நடந்த மாற்றம் குறித்து டோனி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் டோனி, எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடாமல் ஓய்வு எடுத்து வருகிறார். ஓய்வில் இருந்தாலும், ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார்.


அந்த வகையில் டோனி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் தன்னுடைய இல்லற வாழ்க்கை குறித்து அவர் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான். நானும் மற்ற கணவர்களைப் போல ஒருவன் தான்.


என்னுடைய மனைவி என்ன விரும்புகிறாரோ அதனை செய்ய நான் அனுமதி வழங்கி விடுவேன். ஏனென்றால் என்னுடைய மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் தான் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

அதேபோல் என் மனைவி கூறும் எல்லா விஷயத்திற்கும், சரி என்று கூறினால், தான் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். இதன் காரணமாகவே, நான் அவர் நினைப்பதை செய்ய விட்டுவிடுவேன். திருமண வாழ்க்கையின் முக்கிய படலமே 50 வயதிற்கு பிறகுதான்.

ஏனென்றால் நீங்கள் 55 வயதை கடந்து விட்டால் தான் உங்களுக்கு உண்மையாக காதல் வயது வரும். அந்த வயதில்தான் நீங்கள் உங்களுடைய வழக்கமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இந்த விஷயங்களை பற்றி யோசிக்க ஆரம்பிப்பீர்கள் என்று கூறியுள்ளார்.