பாதுகாப்பிற்காக 1 கோடி கேட்ட நடிகை : அலறிய தயாரிப்பாளர்!!

258

Maduri

பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக மட்டும் 1 கோடி கேட்டுள்ளாராம் மாதுரி தீட்ஷித்.

பொலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி மாதுரி தீட்ஷித், சற்று இடைவெளிக்கு பின் தற்போது தேத் இஸ்கியா என்ற இந்தி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்காக முக்கிய நகரங்களில், நிகழ்ச்சிகளை நடத்த படத்தின் தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார்.

இதுகுறித்து மாதுரியின் முகாமையாளரிடம் பேசியபோது, அவர், மாதுரி முக்கிய நகரங்களுக்கு செல்லும்போது ரசிகர்களின் அன்பு தொல்லையில் சிக்காமல் இருக்க வேண்டும்.அவரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதற்கு மட்டும், ஒரு கோடி ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார்.

இதைக்கேட்டு அலறிய தயாரிப்பாளர் படத்தின் பட்ஜெட்டே 10 கோடி தான். என விளம்பர நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டாராம்.