வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 16ஆவது ஆண்டு விழா!!

552

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 16ஆவது ஆண்டு நிறைவு விழாவும் மாருதம் சஞ்சிகை வெளியீடும் எதிர்வரும் 15ம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

கலாநிதி அகளங்கன் தலைமையில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் க.அருள்வேல், வவுனியா பிரதேச செயலளார் கா.உதயராசா, வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி க.பேர்ணாட், வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, வவுனியா நகர சபை செயலாளர் க. சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

து. நந்தீஸ்வரியின் வவேற்புரையுடன் ஆரம்பமாகும் நிகழ்வுகளில் மாருதம் சஞ்சிகையின் முதற் பிரதியை அருட் கலைவாரிதி கலாபூஷணம் ஸ்தபதி சு.சண்முகவடிவேல் பெற்றுக்கொள்ள அறிமுகவுரையினை கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆசிரியர் அ.சத்தியானந்தன் ஆற்றவுள்ளார்.

இதனையடுத்து முருகேசு நந்தகுமாரின் இருட்டு மனிதர்கள் நாவல் வெளியீட்டில் கௌரவ பிரதியை பி.ஏ.சி. ஆனந்தராசா குடும்பத்தினர் பெற்றுக்கொள்ள அறிமுகவுரையினை கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் உப தலைவர் ந.பார்தீபன் வழங்கவுள்ளார்.



இதனையடுத்து பேராசிரியர் சி. மௌனகுரு நேர்காணல்கள் நூலின் தொகுப்பினை கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் வழங்க அறிமுகவுரையினை கவிஞர் சோ.பத்மநாதன் வழங்கவுள்ளார்.

Kalai Ilakkiya