வவுனியா நகர கலாசார மண்டபத்தில் மன்பிறப்பாக்கி இன்மையால் நிழ்வுகளை ஒழுங்கமைப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் பல்வேறு கலை நிகழ்வுகள். திருமண நிகழ்வகள் இடம்பெற்று வரும்போது மின்சாரம் தடைப்படும் பொது மாற்று ஒழுங்கக்கான ஏற்பாடுகள் செய்யப்படாததுடன் மின் பிறப்பாக்கி இல்லாமையும் பெரும் மண்பத்தை வாடகைக்கு பெறுவோர் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
அண்மையில் இவ் விடயம் தொடர்பாக வவுனியா கலைஞர்கள் வவுனியா நகரசபை செயலளாருக்கு வேண்டுகோள் விடுத்தபோதிலும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் கலைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை அதிகளவான வாடகை நகரசபையால் பெறப்படும் நிலையில் மின்சாரம் தடைப்படும் பொது மின்பிறப்பாக்கி இன்மையால் மண்டபத்தை வாடகைக்கு பெறுவோர் கூடுதலான வாடகை செலுத்தி பிறதோர் இடத்தில் மின்பிறப்பாக்கியை பெறவேண்டியுள்ளதாகவும் மண்டபத்தை வாடகைகு பெறுவோர் விசனம் தெரிவித்தனர்.
இந் நிலையில் இவ் ஆண்டுக்கான நகரசபை பாதீட்டில் புதிய பிற்பபாக்கியை கொள்வனவு செய்து நகரசபை கலாசார மண்டபத்தினை திறப்பட நகரசபை நடத்த ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.