வவுனியா மாணவர்கள் சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாதனை!

7


சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட்


கடந்தவாரம் வியட்நாமில் இடம்பெற்ற சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்ட அணியில் வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய மாணவன் செல்வன் மயூரன் யதுர்சன் வெளிபதக்ககத்தை தனதாக்கி கொண்டார்.அதே அணியி கலந்து கொண்ட வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலய மாணவி செல்வி எஸ்.சப்தகி மேற்படி போட்டியில் வெண்கல பதக்கத்தையும் பெற்றுகொண்டு சர்வதேச ரீதியில் இலங்கைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.


24 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்குகொண்டிருந்த சர்வதேசரீதியில் வியட்நாமில் பெற்ற கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மேற்படி இருவரும் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்று சர்வதேச ரீதியில் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.