வவுனியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உதவி தேவை!!

951

Pavitharanவவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற 14 வயது சிறுவனுக்கு இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்ந்துவருகின்றார்.

வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியில் கல்விகற்கும் இம் மாணவன் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பெரும் துன்பங்களுக்கு மத்தியில் தந்தையாரை இழந்த நிலையில் தாயாருடன் வாழ்ந்து வருகின்றார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந் நிலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்கைக்கு அதிகளவான நிதி தேவைப்படுவதனால் அந் நிதியை திரட்டமுடியாதுள்ளமையினால் கருணையுள்ளம் உள்ளவர்களிடம் இருந்து பண உதவியை எதிர்பார்த்துள்ளார்.

எனவே உதவி புரிய விரும்புவோர் 040 200 251 615 866 என்ற வவுனியா மக்கள் வங்கி கணக்கில் தங்களால் முடிந்த உதவியை பணமாக வைப்பிலிடுமாறு தாயாரான திருமதி ராஜசிறி ஜெகதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.



மேலதிக தகவல்களுக்கு 0775278620 என்ற அவரது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

Vavuniya