வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் கலைவிழாவும், பெற்றோர் கௌரவிப்பும்!!கலைவிழாவும், பெற்றோர் கௌரவிப்பும்


வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் பெற்றோர் தின விழாவும், கலைவிழா நிகழ்வும் முன்பள்ளி முகாமைத்துவ குழுவின் தலைவர் ப.ரவிசங்கர் தலைமையில் இன்றயதினம் இடம்பெற்றது.பூந்தோட்டம் லஷ்மி சமேத நரசிங்கர் ஆலய கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டார்.


சிறப்பு அதிதிகளாக வைத்தியர் எஸ்.பஞ்சலிங்கம், சனசமூக நிலைய செயலாளர் ந.கருணாநிதி, மயான அபிவிருத்திச் சங்கத் தலைவர் இ.பாஸ்கரன், முன்பள்ளி ஆசிரியர் சி.ராகினி பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


முன்னதாக விருந்தினர்கள் மாலையிடப்பட்டு வரவேற்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து ஏனைய கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் விசேடமாக மாணவர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களிற்கு சான்றிதழ்களும், வெற்றிகிண்ணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.