வவுனியாவில் சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம் : பரீட்சை நிலையங்களுக்கு இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு!!

1


சாதாரண தர பரீட்சை


நாடளாவீய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.இம்முறை 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சாத்திகள் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ளனர்.


இதேவேளை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள எந்தவொரு பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைக்கு தோற்றலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அத்துடன் வவுனியா மாவட்டத்திலிலுள்ள பரீட்சை நிலையங்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் காலை 7.30 மணியளவிலேயே அதிகளவான மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்குள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள வவுனியா மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பரீட்சை நிலையங்கள் தொடர்பான விடயங்களை ஊடகங்களுக்கு வழங்குவதற்கு வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணை மறுப்பு தெரிவித்துள்ளது.