தந்தையின் சடலத்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு பரீட்சை எழுத சென்ற மாணவன்!!

2


மாணவன்


கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் ஆரம்பமாகின்றன.இந்த நிலையில் திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியில் மகனொருவர் தனது தந்தையின் சடலத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பரீட்சை எழுத சென்றுள்ள சோ க சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.டீ.சமிந்த லசந்த என்பவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.


இந்நிலையில் சமிந்த லசந்தவின் சடலம் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இன்றைய தினம் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்படியானதொரு சூழ்நிலையில் உ யிரிழந்த நபரின் மூத்த மகனான சுபுன் தனன்ஞச (16 வயது) இன்றைய தினம் கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

இதன்போது அவர் பரீட்சைக்கு செல்வதற்கு முன்னர் தந்தையின் சடலத்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி பரீட்சை எழுதுவதற்காக மஹதிவுல்வெவ சிங்கள மகா வித்தியாலயத்திற்கு சென்றுள்ளார்.