வவுனியாவில் 52 பேர் கா ணாமல் ஆக்கப்பட்டதை நினைவு கூர்ந்து ஆ ர்ப்பாட்டம்!!

2


ஆ ர்ப்பாட்டம்..


செட்டிகுளத்தில் 52 தமிழர்கள் கா ணாமல் ஆக்கப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதனை நினைவு கூர்ந்து வவுனியாவில் ஆ ர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.1017 ஆவது நாளாக வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக சுழற்சி முறையில் போ ராட்டத்தில் ஈடுபட்டு வரும் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இக் கவனயீர்ப்பு போ ராட்டம் மேற்கொள்ளப்பட்டது.


1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி செட்டிகுளம் பகுதியில் 52 தமிழர்கள் இ ராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்கள் இன்று வரை வீடு திரும்பவில்லை.


கா ணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் தலையிட்டு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என ஆ ர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விட்டனர்.

அத்துடன், 35 வருடங்கள் கடந்த நிலையில் 52 பேருக்கும் நடந்தது என்ன?, மாற்றுத் தலைமை என்போரே தமிழர் பிரச்சனைக்கு ஏன் இந்தியாவை அழைக்கவில்லை,

சர்வதேசமே நீதியை நிலைநாட்டு என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் அவர்கள் தாங்கியிருந்தார்கள்.