மண்சரிவில் கா ணாமல் போயுள்ள மாணவனின் சடலத்தை தேடும் பணிகள் நிறைவு!!

512

மண்சரிவில்..

வலப்பனை- மலபட்டாவ பிரதேசத்தில் மண்சரிவில் கா ணாமல் போயுள்ள 15 வயது மா ணவனின் ச டலத்தை தே டும் பணிகளை, நேற்று மாலையுடன் நிறைவு செய்ததாக நுவரெலியா மாவட்ட இ ராணுவத்தின் பிரதானி மேஜர் அசித்த ரணதிலக்க தெரிவித்தார்.

மேற்படி இடத்தில் ஏற்பட்ட மண்சரிவால் நால்வர் மண்ணுள் பு தையுண்டதுடன், அவர்களில் மூவர் ச டலமாக மீ ட்கப்பட்டனர். மேலும் ஒருவரை மீட்கும் பணி மூன்றாவது நாளான நேற்று வரை தொடர்ந்ததுடன் இறுதியில் மீட்புப் பணி நேற்று கைவிடப்பட்டது.

இதனையடுத்து, வலப்பனை- மலபட்டாவ பிரதேசத்தில், சனிக்கிழமை மண்சரிவு இடம்பெற்ற இடத்துக்கு அருகில் காணப்படும் கற்குவாரியை உடனடியாக அப்புறப்படுத்துமாறு, வலியுறுத்தி, பிரதேச மக்கள் நேற்று சத்தியாகிரக போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலப்பனை ஸ்ரீ தர்மராஜாரமய விகாரையின் விகாராதிபதி தலைமையில், பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து, வலப்பனை- கண்டி வீதி, நாரன்தலாவ சந்தியை மறித்து, சத்தியாக்கிரகப் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கற்குவாரியானது, சீன நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்டு வருகிறது. கற்குவாரியின் ஆ பத்தை முன்கூட்டியே உணர்ந்துகொண்டதால், மண்சரிவால் உ யிரிழந்த பண்டார என்பவர், கடந்த வருடம், கற்குவாரிக்கு எதிராக போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன்,

அந்த இடத்திலிருந்து தான் போகப்போவதில்லை என்று தெரிவித்து, ஆ ர்ப்பாட்டம் மேற்கொண்டார் என, சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்தக் கற்குவாரி தொடர்பில் சரியான தீர்வு கிடைக்கும் வரை, தாம் சத்தியாகிரகத்தைக் கைவிடப் போவதில்லை என்று, சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

அதன்பின் மத்திய மாகாண ஆளுநர் இது தொடர்பில் ஆராய்ந்து இதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர்ப்பாட்டகாரர்களிடம் தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டகாரர்கள் நேற்று இரவு வேளையில் கலைந்து சென்றுள்ளனர்.

மேலும் அ னர்த்தம் இடம்பெற்ற மலபட்டாவ- கல்வல பகுதியில் ஆ பத்தான இடத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வசித்து வரும் நிலையில், இவர்கள் தற்போது, 2 விகாரைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை பிரதேச செயலகமும், பிரதேசவாசிகளும் வழங்கி வருகின்றனர்.