அமெரிக்காவில் சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு சிறைத் தண்டனை!!

608

Tracher

அமெரிக்காவில் சிறுவன் ஒருவனுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் வசித்து வரும் 28 வயதானவர் அலிசியா கிரே திருமணமானவர். அவர் அங்குள்ள மோண்ட்கோமரி பாடசாலையில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தன்னிடம் படிக்கும் 14 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற விசாரணையின் போது வாக்குமூலம் அளித்த பாதிக்கப்பட்ட மாணவன் கூறுகையில், 2013ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் அவனுக்கும் அலிசியாவுக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும், நாளடையில் அது மிகவும் நெருக்கமடைந்த காரணத்தால் தனது வீட்டில் தாங்கள் இருவரும் பாலியல் உறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளான்.

மேலும் அலிசியாவின் நிர்வாண புகைப்படத்தை அடிக்கடி செல்போன் மூலம் தனக்கு அவர் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளான்.

இதனையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள் அலிசியாவிற்கு 6 மாத சிறைதண்டனையும், 5 வருட காலத்திற்கு நன்னடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் அவரது ஆசிரியர் சான்றிதழையும் ஒப்படைக்கும்படியும் உத்தரவிட்டனர். அவருக்கு நன்னடத்தை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரால் இனி சிறுவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்றும் கூறப்படுகிறது.

அலிசியா கைது செய்யப்பட்ட போது அவருக்கு மிகவும் உறுதுணையாகவும், ஆறுதலாகவும் அவரது கணவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.