தேவயானி திரும்பினால் கைது : அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு!!

505

Devyaniஅமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் தேவயானி திரும்ப வந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் இந்திய துணை தூதராக பணியாற்றியவர் தேவயானி. இவர் மேல் விசா மோசடி குற்றம் சாட்டி, தெருவில் கைவிலங்கிட்டு, அமெரிக்கா கைது செய்தது. இந்த கைதுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும் தேவயானி மீதான நடவடிக்கையை கைவிடவேண்டும் என்றும் அமெரிக்கா மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கோரிக்கையை விடுத்தது.

இந்த கோரிக்கையை நிராகரித்த அமெரிக்க அரசு, இந்திய தூதர் மீது வழக்கு விசாரணை தொடரும் என்று அறிவித்தது. இதனால் இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்தது. தூதரகங்களில் தனிப்பட்ட முறையில் வர்த்தக ரீதியில் செய்யப்பட்ட வணிகங்களை உடனே நிறுத்துமாறும் உத்தரவிட்டது.

இந்நிலையில் தேவயானி உடனே அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று நேற்று முன்தினம் அமெரிக்க அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் உடனடியாக இந்தியா திரும்பினார். இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரை 48 மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், தேவயானி தூதராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் அமெரிக்கா வந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார், எதிர்காலத்தில் அவர் அமெரிக்கா வருவதை கண்காணிக்க அவரது பெயர் இமிக்ரேஷன் பட்டியலில் வைக்கப்படும்.

மேலும் புறப்படும் முன்னர் அவரிடம் கைது வாரண்ட் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்க தூதர் வெளியேற்றப்படுவது வருத்தமளிக்கிறது, இதனால் இந்திய அமெரிக்க உறவில் பின்னடைவு ஏற்படாது என்றும் இதுகுறித்து இந்திய அரசு அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி, இருநாட்டு உறவை புதுப்பிக்கும் என்று நம்புகிறோம் எனவும் கூறியுள்ளார்.