வவுனியாவில் 5 நாட்களில் 169.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி : மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்குமாம்!!

424

வவுனியாவில்..

வவுனியாவில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 169.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் வவுனியா நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் கடந்த மாதம் 30ம் திகதி 34.8 மில்லி மீற்றர் , இம் மாதம் 1ம் திகதி 23.9 மில்லிமீற்றர் , 2ம் திகதி 30.3 மில்லி மீற்றர் , 3ம் திகதி 3.2 மில்லி மீற்றர் , 4ம் திகதி 77.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்துடன் கடந்த வருடம் (2018) மார்கழி மாதம் முழுவதும் 178.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியிருந்த நிலையில் 2019 மார்கழி மாதம் 1ம் திகதி தொடக்கம் 4ம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 135 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இம் மழை வீழ்ச்சியானது கடந்த வருடம் மார்கழி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ் வருடம் மார்கழி மாதம் அதிகளவில் பதிவாகியுள்ளது. அத்துடன் வடகீழ் பருவப்பெயர்ச்சி காற்றின் காரணமாக இம் மழை பெய்து வருவதுடன் மழை காலப்பகுதியில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் என்பன குறைந்தளவு காணப்படும் என மேலும் தெரிவித்தார்.