கிளிநொச்சியில் நீரில் மூழ்கிய பரீட்சை நிலையங்கள் : படகில் சென்று பரீட்சை எழுதும் மாணவர்கள்!!

579

நீரில் மூழ்கிய பரீட்சை நிலையங்கள்

நாட்டில் பெய்து வரும் அதிக மழை காரணமாக கிளிநொச்சி ஆனந்தபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் ஏற்பட்ட வெள்ள நீர் காரணமாக 168 பேர் பல இடங்களில் சிக்குண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் இன்று அதிகாலை இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இராணுவ கட்டளையதிகாரியின் பணிப்புக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் கிளிநொச்சி தர்மபுரம் மகா வித்தியாலயத்திலும் கிளிநொச்சி இந்து வித்தியாலயத்திலும் காணப்படும் கல்வி பொது தராதர பரீட்சை மத்திய நிலையங்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பரீட்சை மத்திய நிலையங்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கீழ் மாடிகளில் உள்ள அனைத்து மேசை மற்றும் கதிரைகளை இராணுவ வீரர்கள் மேல் மாடிகளுக்கு கொண்டு சென்று பரீட்சைக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் முன்னெடுக்க வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.

மேலும் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களை இராணுவ வீரர்கள் படகு மற்றும் ட்ரக் மூலம் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவசர நிலை ஏற்படும் பட்சத்தித்தில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து இராணுவத்தினர் ஆங்காங்கு சீராக வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.