கடவுச்சீட்டுக்களுக்கு கைவிரல் அடையாள நடைமுறை ஏப்ரலில் அமுல்!!

1022

biometric-passportபுதிதாக கடவுச்சீட்டுப் பெற விண்ணப்பிப்போரிடமிருந்து கைவிரல் அடையாளம் பெறும் புதிய நடைமுறை இலங்கையில் அமுலாக்கப்படவுள்ளது.

ஏப்ரலில் இருந்து புதிதாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களை சமர்ப்பிப்போரிடம் இருந்து கைவிரல் அடையாளங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்று குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா அறிவித்துள்ளார்.

கடவுச்சீட்டுக்களின் தரத்தை சர்வதேச தரத்தில் பேணும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.