யாழ்ப்பாணத்தில் குளமொன்றிலிருந்து ச டலமாக மீட்கப்பட்ட நபர்!!

514

குளமொன்றிலிருந்து..

யாழ்ப்பாணம் – புங்கன் குளம் வண்ணான் குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் ச டலம் ஒன்று இன்று காலை க ண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளத்தில் ச டலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பிரதேச மக்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டவர் 60 வயது மதிக்கத்தக்க கொழும்பு பகுதியை சேர்ந்த முதியவர் என தெரிவிக்கப்படுகிறது. காட்டுப்பூச்சி என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்ட இவர் குடும்பத்தவர்கள் கைவிட்ட நிலையில்,

யாழ்ப்பாணத்தில் தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் தங்கி இருந்துள்ள நிலையிலே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் ச டலத்தை மீட்கும் பணிகளையும் முன்னெடுத்துள்ளனர்.