ஜனாதிபதி கோட்டாபயவைப் போல விமான நிலையத்தில் நடந்து கொண்ட இராஜாங்க அமைச்சர்!!

607

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினை பின்பற்றி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் பகுதி ஊடாக அவர் நேபால் நாட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபுக்கள் செல்லும் பிரத்தியேக நுழைவுப் பாதையின் ஊடாக செல்ல முடியுமாக இருந்தும், சாதாரண பயணிகள் செல்லும் வழியில் அவர் விமானத்தில் ஏறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தான் பதவி ஏற்றதன் பின்னர் தனது முதலாவது விஜயமாக இந்தியாவிற்கு சென்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட தூரம் நடந்து சென்று சாதாரண பயணிகள் செல்லும் பாதையின் ஊடாக விமானத்திற்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் அவரைப் பின்பற்றி இன்று இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் இவ்வாறு சென்றிருப்பது அனைவரது கனவத்தையும் ஈர்த்துள்ளது.