ஐந்து மாதங்களின் பின் தோண்டியெடுக்கப்பட்ட ச டலம் : ம ரணத்தில் ம ர்மம்!!

212

ம ரணத்தில் ம ர்மம்

தலவாக்கலை – லிந்துலை, நோனா தோட்ட பொது மயானத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஆணொருவரின் ச டலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று குறித்த ச டலம் வி சாரணைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.

கடந்த ஜுலை மாதம் 24ஆம் திகதி சுகவீனம் காரணமாக உ யிரிழந்த 63 வயதுடைய பிச்சை ஜெகநாதன் உ யிரிழந்தார். இவரது சடலம் தோட்ட பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. எனினும், இவரின் இ றப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரின் மருமகன் நடராஜ் ரமேஸ் லிந்துலை பொலிஸில் முறைப்பாடு செய்ய முயற்சித்துள்ளார்.

எனினும், முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றது. இருந்தபோதிலும், இது தொடர்பில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, முறைப்பாட்டை முன்வைத்த மருமகன், ம ரணித்தவரின் குடும்பஸ்த்தர்கள் ஆகியோர் நுவரெலியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு வரவழைக்கப்பட்டு வி சாரணை செய்யப்பட்டனர்.

தான் ம ரணித்தால் அதற்கு தனது மனைவியே காரணம் என பிச்சை ஜெகநாதன் தன் கைபட எழுதிய கடிதமும் சிக்கியுள்ளது. இந்நிலையிலேயே வி சாரணைக்காக ச டலம் தோண்டப்பட்டுள்ளதுடன், மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.