இலங்கை அகதிகளுக்கான திட்டத்தில் பல லட்சம் ரூபாய் கையாடல் : கு ற்றவாளிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய த ண்டனை!!

338

இலங்கை அகதிகளுக்கான..

தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கான கடன் திட்டத்தில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை கையால் செய்த தாசில்தார் உட்பட நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகள் சிறை த ண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோட்டத்தில் உள்ள விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி வட்டங்களில் வசித்து வந்த இலங்கை அகதிகளுக்கு 1994-1995 மற்றும் 1995-1996 ஆகிய ஆண்டுகளில் வீட்டுக்கடன் மற்றும் தொழில் கடன் வழங்குவது தொடர்பாக குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டது.

அப்போது விருத்தாசலம் கோட்டாட்சியர், திட்டக்குடி தாசில்தார், தலைமையிடத்து துணை தாசில்தாரர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரால் மு றைகேடாக போ லியான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு அரசு நிதியிலிருந்து 50,58,000 ரூபாய் கையாடல் செய்தது தொடர்பாக கடலூர் ஊ ழல் த டுப்பு மற்றும் கண்காணிப்பு பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு இதன் விசாரணையில், 13 நபர்கள் மீது கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் 2003-ஆம் ஆண்டில் கு ற்றப்பத்திரிகை தா க்கல் செய்யப்பட்டது.

இந்த கு ற்றப் பத்திரிகை மீதான இறுதிக்கட்ட வி சாரணை முடிவடைந்த நிலையில், கடலூர் மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் மற்றும் ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிபதி திருவேங்கட ஸ்ரீனிவாசன் கடந்த 7-ஆம் திகதி தீர்ப்பளித்தார்.

இதில் ஊழல் வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்ட திட்டக்குடி முன்னாள் தாசில்தார் வீர.செல்லையா, முன்னாள் தலைமையிடத்து துணை தாசில்தார் பிச்சைப்பிள்ளை, விருத்தாசலம் தலைமையிடத்து துணை தாசில்தார் கோயில்பிள்ளை மற்றும் சதாசிவம் உள்ளிட்ட 4 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை த ண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து ஊழல் கு ற்றவாளிகள் 4 பேரும் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.