திருக்கார்த்திகை உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் திருக்கார்த்திகை உற்சவம் இன்று வெகு சிறப்புற இடம்பெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானையுடன் காட்சியளித்தார்.

இரவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து கையிலாய வாகனத்தில் அமர்ந்து வெளிவீதி உலா வந்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ததுடன் வெளி மாவட்ட பக்தர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது.





