வவுனியா ஓமந்தை கண்ணகை அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருநாள்!!கார்த்திகை தீபத் திருநாள்


வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாள் நேற்றையதினம் (11.12.2019) வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.ஓமந்தை அரசர்பதி ஶ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை எனும் இடத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.


உலக இந்துக்களால் நேற்றையதினம் கார்த்திகை தீபத் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டதுடன், வவுனியாவில் மக்கள் தீபமேற்றி கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.