வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர் ஒரு லட்சம் சரீரபிணையில் விடுதலை!!

790

vavunia_high_courtவவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் சுந்தரபுரம் கிளையில் கைப்பற்றப்பட்ட காலவதியான சீனி மூடைகள் தொடர்பான வழக்கில் கிளை முகாமையாளரை ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையில் வவுனியா நீதிமன்றம் விடுவித்துள்ளது.

கடந்த 9 ஆம் திகதி வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் சுந்தரபுரம் கிளையில் பொங்கல் காலவிற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 மூடை சீனி பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு அவை காலாவதியானதாக தெரிவிக்கப்பட்டு வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ் வழக்கு நேற்று (13.1) வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கிளை முகாமையாளருக்கு ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டதுடன் கிளை முகாமையாளர் தான் சுற்றவாளி என தெரிவித்தமையினால் விசாரணைக்காக எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என கிளை முகாமையாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.