வடமாகாணத்தின் கழிவுமுகாமைத்துவமுறைகள் நவீனமயப்படுத்தப்படல் வேண்டும் : அமைச்சர் ப.சத்தியலிங்கம் !!

611

Sathiyalingamவடகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களினால் தற்போது மேற்கொள்ளப்படும் கழிவு முகாமைத்துவமுறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படல் வேண்டுமென வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா நகர சபையில் நேற்று முன்தினம் (12.1) நடைபெற்ற நகரசுத்திகரிப்பு தொழிலாளர்களுடானான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக வவுனியா நகர சபை மற்றும் பிரதேச சபையின் ஊழியர்களால் தமக்கு நிரந்தர நியமனம் வழங்ககோரி நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடந்து பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வழங்குவதற்காக வடமாகாண சபையில் தீர்மானமொன்று சுகாதார அமைச்சரினால் கொண்டுவரப்படிருந்தது.

இந்த நிலையில் சுகாதார அமைச்சரின் வேண்டுகோளிற்கிணங்க ஊழியர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டிருந்த நிலையில் அவர்களை நேற்று முன்தினம் சுகாதார அமைச்சர் சந்தித்து கலந்துரையாடினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், உள்ளுராட்சி சபைகளில் வேலைசெய்யும் ஊழியர்கள் மாவட்டத்தின் சுகாதார துறையின் முன்னேற்றத்திற்கு மறைமுகமாக பெரும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டில் வவுனியாவை ஆட்டிப்படைத்த டெங்கு உயிர்க்கொல்லி நோய் பரவுவதை தடுப்பதற்கு சுகாதார ஊழியர்கள் பெரும்பங்காற்றியுள்ளனர். எனவே உங்களின் பணியானது சமூகப்பொறுப்பு வாய்ந்தது. உங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதற்கு இந்த மாகாணசபை ஒருபோதும் பின்நிற்காது.

அதேபோல் தற்போதைய கழிவு முகாமைத்துவ முறைகள் மேலும் நவீன மயப்படுத்தப்படல் வேண்டும். குறிப்பாக கடைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்டும்போது உக்கக்டையக்கூடிவை, உக்கலடையாதவை தனித்தனியாக சேகரிக்கப்டல் வேண்டும்.

அத்துடன் உக்கலடையக்கூடியவை கூட்டெருவாக மாற்றப்பட்டு பயிர்ச்செய்க்கு சேதன உரமாக பயன்படுத்தப்படுவதுடன் ஏனைய பிளாத்திக்கு போன்றவை மீள்சுழற்சிக்கு பயன்படுத்தப்படல் வேண்டும். முதற்கட்டமாக வவுனியா நகரசபையின் கழிவுமுகாமைத்துவம் நவீனமயப்படுத்தப்பட்டு ஏனைய மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.