அனுஷ்காவுடன் ஒரே வீட்டில் வீராத் கோலி!!

523

kohli_anushka

இந்திய அணியின் இளம் வீரர் வீராத் கோலி, பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென் ஆபிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பிய இந்திய அணி நேற்று நியூசிலாந்து புறப்பட்டு சென்றது. அங்கு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது.

இந்நிலையில் நியூசிலாந்து புறப்படுவதற்கு முன்பாக வீராத் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா புதிதாக வாங்கியிருக்கும் 3 பிளாட்டுகள் அடங்கிய வீட்டில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காக சந்தித்து கொண்ட இருவரும், அடிக்கடி ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர். நேற்று மற்ற வீரர்கள் கிளம்பி சென்ற பின்னர் விமான நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் வீராட் கோலி அமர்ந்திருந்தார்.

அதற்கு அனுஷ்காவின் கார் வருவதற்கு 20 நிமிடங்கள் தாமதமானதே காரணமென கூறப்படுகிறது.

இதேபோன்று தான் தென் ஆப்ரிக்கா செல்வதற்கு முன்பாகவும் அனுஷ்காவை கோலி சந்தித்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.