ஐபிஎல் தொடரில் 14 வயது வீரருக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம் : யார் இவர்?

443

ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 வயது வீரரும் தெரிவாகியிருப்பது, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. 2020-ஆம் ஆண்டிற்கான இந்த தொடரின் ஏலம், இந்த மாதத்தின் 19-ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்ள சுமார் 971 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அதை எல்லாம் சரி பார்த்து, 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஏலத்தில் 14-வயது ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது அறிமுகமாக உள்ளார். ஏலத்தில் அவர் பங்கேற்கும் தகவல்களை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த நூர் முகமதுவை, ஐபிஎல் ஏலத்தில் ஏதேனும் ஒரு அணி வாங்கினால் ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்ற குறைந்த வயது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

இதனால் இது ஒரு அதிசயம் மற்றும் அதிர்ஷ்டமாகவும் பார்க்கப்படும்,்மணிக்கட்டு பகுதியை பயன்படுத்தி சுழல் பந்து வீசும் திறமை படைத்த நூர் அகமது ஆப்கானிஸ்தான் அணியின் 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர் அந்த தொடரில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.