வவுனியா பூந்தோட்டம் இளைஞர்களால் மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!!

607

டெங்கு ஒழிப்பு

வவுனியா – பூந்தோட்டம், சிறிநகர், பெரியார்குளம் கிராமங்களை உள்ளடக்கியதான மாபெரும் டெங்கு ஒ ழிப்பு நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமங்களின் இளைஞர்கள், பெண்கள், பொது அமைப்புகள், சுகாதார பிரிவினர் ஆகியோர் இணைந்து இந்த செயற்திட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையானது மாலை 5 மணி வரை தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தது.

இதன்போது பல்வேறு குழுக்களாக பிரிந்த இளைஞர்கள் மூன்று கிராமங்களையும் உள்ளடக்கிய அனைத்து வீடுகளுக்கும் சென்று டெங்கு நுளம்பு பரவும் வகையில்,

சூழலை வைத்திருந்தவர்களிற்கு அறிவுரைகளை வழங்கியிருந்ததுடன், போத்தல்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இளநீர் கூடுகள் போன்றவற்றையும் அகற்றியுள்ளனர்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமையை கருத்தில் கொண்டே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதில் இளைஞர்கள், மேற்பார்வை சுகாதார பரிசோதகர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.