தலைப்பொங்கல் கொண்டாடும் நடிகர்–நடிகைகள்!!

436

Barathதமிழ் பட உலகில் கடந்த வருடம் இயக்குனர்கள், நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட 34 பேருக்கு திருமணம் நடந்துள்ளது. எல்லோரும் இந்த வருடம் தலைப்பொங்கலை கொண்டாடுகிறார்கள். நடிகர் பரத்-ஜெஸ்லி ஜோடிக்கு இரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சென்னையில் தலைப் பொங்கலை கொண்டாட உள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பின்னணி பாடகி சைந்தவிக்கும் கடந்த ஜுன் மாதம் திருமணம் நடந்தது. இவர்களும் தலைப் பொங்கலை கொண்டாட தயாராகிறார்கள்.

வைகாசி பிறந்தாச்சு படத்தில் பிரபலமான நடிகை காவேரி, ராகேஷ் திருமணம் ஜூலை மாதம் நடந்தது. இதே மாதத்தில் நடிகர் நந்தா–வித்யரூபா ஜோடிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கும் இது தலைப் பொங்கல். ஜெயம்ரவி ஜோடியாக இதயதிருடன், ஜீவன் ஜோடியாக மச்சக்காரன், லாரன்சுடன் ராஜாதிராஜா படங்களில் நடித்து பிரபலமான காம்னா ஜெத்மலானி–சுராஜ் ஜோடி திருமணம் செப்டம்பரில் நடந்தது.

சாமுராய் படத்தில் விக்ரமுடன் நடித்த அனிதா ரோகித் ஷெட்டி திருமணம் அக்டோபரில் நடந்தது. பரத் ஜோடியாக யுவன் யவதி படத்தில் நடித்த ரீமாகல்லிங்கல், மலையாள இயக்குனர் ஆஷிக் அபு திருமணம் நவம்பரில் நடந்தது.

காமெடி நடிகர் பிளாக்பாண்டி, உமேஸ்வரி பத்மினி திருமணம் டிசம்பரில் நடந்தது. நடிகை பூர்ணிதா–ரோகித் திருமணமும், இஷ்டம் படத்தில் நடித்த நிஷா அகர்வால்–சரன்வாலச்சா திருமணமும் கடந்த மாதம் நடந்தது. இவர்களுக்கும் இது தலைப்பொங்கல்.