குழந்தைகளே எனக்கு உலகம் : பிரபுதேவா!!

419

Prabu Deva

பிரபுதேவா இந்தியில் பிசியான இயக்குனராகியுள்ளார். சம்பளமும் அதிகம் வாங்குகிறார் அவர் அளித்த பேட்டி வருமாறு..

என்னை கமர்ஷியல் பட இயக்குனர் என்று சொல்லிக் கொள்வதில் மகிழச்சியடைந்தேன். படம் தயாரிக்க சொல்லி என்னை அணுகும் பட அதிபர்களுக்கு உண்மையாக இருக்கிறேன். அவர்கள் தான் பெரிய தொகையை முதலீடு செய்து படத்தை எடுக்கிறார்கள்.

திகில் படங்களையும் சீரியஸ் கதையம்சம் உள்ள படங்களையும் எடுக்க எனக்கும் விருப்பம் உள்ளது. ஆனால் அவற்றை மற்றவர்கள் பணத்தில் எடுத்து பரிசோதிக்க தயாராக இல்லை என் சொந்த பணத்தை முதலீடு செய்து படம் எடுக்கும் நிலை வரும் போது அப்படிப்பட்ட படங்களை எடுப்பேன்.

ரீமேக் படங்களையே நான் எடுக்கிறேன் என்று சொல்லப்படுகிறது. அது தானாக அமைந்து விட்டது. இனிமேல் நான் எடுக்கப் போகும் படங்கள் எனது ஒரிஜினல் கதைகள். தமிழில் நான் நடித்த களவாடிய பொழுதுகள் படம் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது. அது நல்ல காதல் கதை. அப்படம் விரைவில் ரிலீசாக வேண்டும் என்று விரும்புகிறேன்.

எனது உடம்பை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள நடனம் எனக்கு உதவுகிறது. காலை 6.30 மணிக்கு எழுந்து விடுகிறேன். நள்ளிரவுவரை பணி செய்கிறேன். கதா நாயகர்களுக்கு பிடித்தமான இயக்குனர் என்று என்னை சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கதாநாயகர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுப்பது இல்லை. அவர்களுடன் நட்புறவுடன் இருப்பேன். நேரம் முக்கியம் காலை 9 மணிக்கு சூட்டிங் ஆரம்பிப்பேன். மதியம் 1 மணிக்கு உணவு இடை வேளை மாலை 5.55 மணிக்கு படப்பிடிப்பை முடித்து விடுவேன்.

சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை என் குழந்தைகள்தான் எனக்கு உலகம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சென்னை வந்து குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுகிறேன். புத்தாண்டுக்கு குழந்தைகளை மைசூரில் உள்ள துராகிரடாமத்துக்கு அழைத்து சென்றேன். அது தான் என் சொந்த ஊர். அங்கு பூர்வீக சொத்துக்கள் மற்றும் பண்ணை வீடு உள்ளது. உறவினர்களும் இருக்கிறார்கள் என்று பிரபுதேவா கூறினார்.