அரை மனதுடன் மகளின் உ டலை அ டக்கம் செய்தோம் : அதன்பின் தொலைக்காட்சியில் வந்த செய்தியில் என்மகள்!!

428

அரை மனதுடன்..

2013ஆம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்தவரின் மகள் இ றந்துவிட்டதாக உ டலை வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த நிலையில், அவர் தற்போது உ யிருடன் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் பிலோமினா பகுதியை சேர்ந்த தம்பதியர் அந்தோணி யாகப்பா, பவுலின் மார்த்தாள். இவரது மகள் இமாகுலேட். இமாகுலேட் கணினி தொடர்பான பட்டபடிப்பை முடித்துவிட்டு வறுமை காரணமாக, சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்றபின் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அலைப்பேசி, தொலைப்பேசி எதுவும் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இமாகுலேட் உரிமையாளர் அலைப்பேசியில் இருந்து அழைத்து தாய், தந்தையிடம் பேசி வந்துள்ளார்.

2013ஆம் ஆண்டும் மே மாதம் 5ஆம் திகதி பெற்றோருக்கு அழைத்து “எனக்கு இங்கு வேலை கஷ்டமாக உள்ளது. கணினி தொடர்பான வேலை வழங்கவில்லை. வீட்டு வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. என்னை அனுப்பிய ஏஜென்ட் புஹாரியிடம் கூறி உடனே, என்னை அழைத்து கொள்ளுங்கள்” என்று அழுதபடி தெரிவித்துள்ளார்.

உடனே பெற்றோர் ஏஜென்ட்-யிடம் தெரிவித்துள்ளனர். அவர் முறையான பதில் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.

இந்நிலையில், அதே வருடம் மே மாதம் 21ஆம் திகதி இமாக்குலேட் வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் அவரின் பெற்றோருக்கு அழைத்து “உங்கள் மகள் த ற்கொ லை செய்து கொண்டார். இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு உ டலை வாங்குகள்” என்று தெரிவித்துவிட்டு அலைபேசியை துண்டித்துள்ளார்

அ திர்ச்சியடைந்த இமாக்குலேட்டின் பெற்றோர், அ ழுது பு லம்பியபடி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி இ றப்பை ச ந்தேக ம ரணம் என்று பதிவு செய்து உ டலலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.

அவ்வாறு 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இமாக்குலேட் உடல் திருச்சி விமானநிலையம் வந்தடைந்துள்ளது. அங்கு பெட்டியை திறந்து பார்த்து, இது எங்கள் மகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், யாரும் நம்பவில்லை. மீண்டும் நீதிமன்றம் சென்ற அவர்களுக்கு டி.என்.ஏ சோதனை செய்ய உத்தரவு கிடைத்துள்ளது.

அதன்படி டி.என்.ஏ சோதனை நடந்துள்ளது. அதில், அது இமாக்குலேட் என்று சான்று வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வேறு வழியின்றி அந்த உ டலை அ டக்கம் செய்துள்ளனர்.

அதன்பின், கடந்த ஜனவரி மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த 23பேர் சவுதியில் கொ த்தடி மைகளாக இருக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், இமாக்குலேட் இருப்பதை பெற்றோர் கண்டுள்ளனர். இதை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர்கள் உள்துறை அமைச்சகத்திற்கு நடந்தவற்றை விளக்கி கடிதம் எழுதியுள்ளனர். அதில், இதுவரை என்ற முன்னேற்றமும் ஏற்படவில்லை.

முதலில், உ டலை மீ ட்டுத்தர போ ராடினோம். தற்போது, இமாக்குலேடையும், அவருடன் இருக்கு 23 பே ரையும் மீட்டுத்தர போ ராடி வருகிறோம் என்று பெற்றோர் க லங்கியபடி தெரிவித்துள்ளனர்.