இசையமைப்பாளர் அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடி புகார்!!

508

Aniruthஇசையமைப்பாளர் அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இவர் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். எதிர்நீச்சல், வணக்கம் சென்னை படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

தற்போது வாயை மூடி பேசவும் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டு அட்வான்ஸ் வாங்கி விட்டு பிறகு இசையமைக்க மறுத்து விட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் வருண்மணியன் குற்றம் சாட்டி உள்ளார். அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது..

வாயை மூடி பேசவும் படத்துக்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தோம். இதற்காக அவருக்கு 5 லட்சம் அட்வான்ஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஒப்புக் கொண்டபடி படத்துக்கு அவர் இசையமைக்கவில்லை. இதனால் அனிருத்துக்கு பதில் ஷான் ராகவேந்திரா இசையமைத்தார்.

எங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் அனிருத் திருப்பி தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.