குடும்பத்திற்காக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தாய் : 14 ஆண்டுகள் வரமால் ச டலமாக திரும்பும் து யரம்!!

264

குடும்ப சூழ்நிலை காரணமாக இஸ்ரேலுக்கு வேலைக்காக சென்ற பெண் ஒருவர் 14 வருடங்களாக திரும்பி வராத நிலையில், தற்போது அவர் இ றந்துவிட்டார் என்ற தகவல் வந்துள்ளதால் குடும்பத்தினர் வே தனையில் உள்ளனர்.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் கொட்டரக்கார பகுதியை சேர்ந்தவர் ஜெயா விஜயராஜன். 53 வயதான இவருக்கு விஜயராஜன் என்ற கணவர் உள்ளார்.

விஜயராஜன் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீடு திரும்பினார்.

இதனால் குடும்ப சூழ்நிலை, பணம் தேவை போன்ற காரணத்தினால் ஜெயா 14 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலில் இருக்கும் பள்ளி ஒன்றிற்கு குழந்தைகளை கவனிக்கும் வேலை சென்றுள்ளார்.

2013-ஆம் ஆண்டோடு இவருடைய பாஸ்போர்ட் காலாவதி ஆன போதும், இஸ்ரேலில் இவர் நாடு திரும்பாமல் அங்கு ச ட்டவிரோ தமாக தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு குடும்பத்தினரை தொடர்பு கொண்ட ஜெயா, என்னுடைய உடல்நிலை சரியில்லை, கடந்த சில ஆண்டுகளாகவே நான் இங்கு சிகிச்சை பெற்று வருகிறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட அவருடைய கணவர் கேரளாவிற்கு வந்துவிடு, பார்த்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

ஆனால் அவர் கேரளாவிற்கு வரவில்லை. அதன் பின் நான்கு மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினரை தொடர்பு ஜெயா என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது, அதற்கு சிகிச்சையளிக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.

இதனால் குடும்பத்தினர் தங்களிடம் இருந்த சொத்தை அடமானம் வைத்து பணம் அனுப்பியுள்ளனர்.

இருப்பினும் அவரின் உ யிர் பிழைக்கவில்லை, கடந்த வெள்ளிக்கிழமை உ யிரிழந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது.

அவரின் உ டலை கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஜெயாவிற்கு இரண்டு மகள்கள், அவர்கள் அம்மா ஜெயாவைப் பற்றி கூறுகையில், அம்மா கடந்த 2004-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு சென்றனர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்பா வெளிநாட்டில் இருந்து திரும்பிவிடதால், அம்மா வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று பணம் அனுப்பி வந்தார்.

நாங்கள் ஒவ்வொரு முறை பேசும் போதும், இங்கு வரும் படி கூறுவோம், ஆனால் அவர் பணம் இல்லை என்று வே தனையுடன் கூறுவார் என்று தெரிவித்துள்ளனர்.