5 பெண்கள் உள்ளிட்ட 6 இந்தியர்கள் இலங்கையில் கைது!!

589

Arrestedவிசா விதிமுறைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஐவர் பெண்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொரளை பகுதியில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதியில் பணிபுரிந்த 5 இந்திய பெண்களை நேற்று பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் குறித்த பெண்களை பணிக்கு அமர்த்திய களியாட்ட விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்கள் சுற்றுலா விசாவில் இலங்கை வந்து பணிபுரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்கென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சுற்றுலா விசாவில் இலங்கை வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியர் ஒருவர் வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.