கடல் வழியாக இலங்கைக்கு தப்ப முயன்ற 10 வயது சிறுவன் உட்பட ஆறு இலங்கை அகதிகள் கைது!!

424

படகில் கடல் வழியாக இலங்கைக்கு த ப்ப முயன்ற 6 இலங்கை அகதிகள் தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இயற்றப்பட்டதை அடுத்து, இந்தியாவில் வசித்து வரும் முஸ்லிம்கள் உட்பட, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் தங்கியிருக்கும் அகதிகளும் பெரும் க லக்கலமடைந்துள்ளனர்.

இதனால் அவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இந்த சட்டதிருத்தத்திற்கு எ திர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாகவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போ ராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு, தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கடற்கரை பகுதியில் 10 வயது சிறுவன் உட்பட ஆறு இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த சுதாகர் (40), அவரது மனைவி சந்திரமதி (36), மகன் ஹரிஸ்கரன் (10), உதயகுமார் (40) மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சதீ‌ஷன் (42), அவரது மனைவி திலக்சனா (31) என்பது தெரியவந்துள்ளது.

தற்போது இவர்கள் 6 பேரும் இலங்கை திரும்ப முடிவு செய்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு முகவரை அணுகியுள்ளனர். படகு வர தாமதமானதால் தனுஷ்கோடியில் காத்திருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.