மனைவிக்காக கணவன் எடுத்த முடிவு : இப்படியும் ஓர் கணவனா?

323

இப்படியும் ஓர் கணவனா?

தமிழகத்தில் சூழ்நிலை காரணமாக தி ருடனாக மாறிய நபர் தற்போது மனைவிக்காக திருந்தியுள்ள நிலையில், அவரின் இந்த முடிவிற்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் கமலகண்ணன், தி ருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த இவர் தற்போது தன்னுடைய மனைவிக்காக திருந்தியிருப்பதாகவும், இனிமேல் நான் தி ருடமாட்டேன் என்று கமிஷ்னர் அலுவலகத்தில் கமலகண்ணன் மனு கொடுத்தார்.

அப்போது ஊடகங்களிடம் நான் என் மனைவிக்காக திருந்தி வாழ முடிவு செய்திருப்பதாகவும், அதன் காரணமாகவே இந்த மனுவை கொடுத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரிடம் பிரபல தமிழ் ஊடகம் இந்த திடீர் முடிவு குறித்து கேட்ட போது, நான் நான்காம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். சிறுவயதில் இருந்தே என் சித்தியின் கொ டுமை தா ங்கமுடியாமல், வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தேன்.

சென்னை கொருக்குப்பேட்டையில அக்கா வீட்ல தங்கி கொத்தனார் வேலைபார்த்து வந்த போது, ஒரு கட்டத்தில் வேலையின் போது நான் கொத்தனாரை அ டித்துவிட்டதாக பொலிசார் என்னை அழைத்து சென்றுவிட்டனர். அப்போது என் அக்கா தான் பிணையில் எடுத்தார்.

நான் இதற்காக சிறை சென்ற போது அங்கு ஒருவரின் பழக்கம் கிடைத்ததால், அவன் செய்த த ப்புக்காக பொலிசார் அவனை பிடித்து சென்ற போது, என்னையும் பிடித்து சென்றுவிட்டனர். இதனால் என் அக்கா உண்மையில் என் மீது தான் தப்பு இருக்கிறது என்று எண்ணி என்னை பிணையில் எடுக்காமல் சென்றுவிட்டார்.

இதன் காரணமாக பல மாதங்கள் ஜெயிலில் இருந்தேன், அதன் பின் விடுதலையானவுடன் என் வாழ்க்கையே மாறிவிட்டது என்று தான் சொல்வேன், ஜெயிலில் இருந்து வந்த பின்பு தி ருட ஆரம்பித்தேன். அப்போது தான் என் அக்கா இவனுக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்துவான் என்று கூறி, கலா என்ற பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

நான் கொத்தனார் வேலை செய்த போது, கலாவை எனக்கு தெரியும், அவரும் ஏதோ சூழ்நிலை காரணமாக நான் இப்படி மாறிவிட்டேன் என்று நினைத்து அவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, இருவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்பு தான், வாழ்க்கை மீதே எனக்கு ப யம் வந்துவிட்டது, நான் செய்த தவறுக்கு என்னை யாரேனும் திட்டினாள் பரவாயில்லை, ஆனால் அவளை யாராவது கேட்டுவிட்டால் என்ற பயம் அதன் காரணமாக இப்படி ஒரு முடிவை எடுத்தேன்.

அதன்படி வக்கீல், பொலிசாரிடம் இதைப் பற்றி கூறினேன், அவர்களும் இது நல்ல முடிவு என்று கூறியதால், கமிஷ்னரிடம் மனு கொடுத்தேன் என்று கூறி முடித்தார்.

மேலும் கமலகண்ணன் இரவு நேரங்களில் தான் தி ருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார், இதனால் தன் மீது மீண்டும் ஏதேனும் திருட்டு பழி வந்துவிடுமோ என்று எண்ணி அவர் தன் தெருவில் சிசிடிவி கமெராவை தன்னுடைய பா துகாப்பிற்காகவும், ஆ தாரத்திற்காகவும் வைத்துள்ளார்.