யாழ். குடாநாடு தனித்தீவாகும் அ பாயம்!!

452

யாழ். குடாநாடு

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அவசியமாக இருந்த வழித்தட அனுமதியை நீக்கியிருப்பதால் வடக்கில் மணற்கொ ள்ளை விஸ்வரூபம் பெற்றுள்ளதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இதனால், சுற்றுச்சூழலில் பாரிய சீர்குலைவு ஏற்பட இருப்பதோடு, யாழ். குடாநாடு தனித்தீவாகும் அ பாயமும் அதிகரித்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகரித்திருக்கும் ச ட்டவி ரோத மணல் அகழ்வைக் கண்டித்து இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகக் கண்டன ஆ ர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த ஆ ர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

பூமி வெப்பமடைதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது. யாழ்ப்பாணக் குடாநாடு பல கடல் நீரேரிகளைக் கொண்டுள்ளதால் குடாநாட்டுக்குள் கடல்நீர் புகும் அ பாயம் இருக்கிறது.

இதனால், ஆனையிறவுப் பகுதியில் துண்டிக்கப்பட்டு குடாநாடு தனித்தீவாகும் எனவும் சூழலியலாளர்கள் ஏற்கனவே எச்சரித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்போது, நான் முந்தி நீ முந்தி என்று மணல் மா ஃபியாக்களால் மணற் கொ ள்ளை கட்டுப்பாடற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதால் கடல் நீர் உட்புகுந்து யாழ். குடாநாடு தனித்தீவாகும் அ பாயம் மேலும் அதிகரித்திருக்கிறது.

மணல் அபிவிருத்திக்குத் தேவையான வளம் மாத்திரம் அல்ல் நிலத்தடியில் நன்னீரைத் தக்கவைப்பதிலும் மணல் பெரும் செல்வாக்கைச் செலுத்துகிறது. மணல் மேடுகள் குறையக் குறைய நிலத்தடி நன்னீரின் அளவும் குறைந்து அவ்விடத்தைக் கடல்நீர் ஆ க்கிரமிக்கின்றது.

போ ரில் ஏற்கனவே பெரும் பா திப்பைச் சந்தித்திருந்த எமக்கு மணல் ஏற்றும் வாகனங்களுக்கான அனுமதித் தடை நீக்கம் இப்படிப் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவுள்ளது.

அரசாங்கம் உடனடியாக மீளவும் மணல் ஏற்றுகின்ற வாகனங்களுக்கான அனுமதியைக் கட்டாயமாக்குவதோடு ச ட்டவி ரோத மணல் அகழ்வுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் மணற் கொ ள்ளைக்கு எ திரான போ ராட்டம் விரைவில் மாகாணம் தழுவிய அளவில் விரிவுபடுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.