இந்தியாவில் யாரும் பாதுகாப்பாக இல்லை : கங்குலியின் மகள் ஆவேசம்!!

359

இந்திய குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போ ராட்டம் நடந்து வரும் நிலையில், கங்குலியின் மகள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் வாயிலாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, அகதிகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் முஸ்லீம் அல்லாதோருக்கான குடியுரிமை சட்டத்திருத்தம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இது முஸ்லீம் மட்டுமின்றி இலங்கை தமிழருக்கு எ திராகவும் அமைந்துள்ளது. இதற்கு எ திர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பலரும் கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் தொடர் போ ராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எ திர்ப்பு தெரிவித்ததோடு, மாணவர்களின் போ ராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான கங்குலியின் மகள் சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எ திர்ப்பு தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட குஷ்வந்த் சிங் எழுதிய ‘இந்தியாவின் முடிவு’ புத்தகத்தின் ஒரு பகுதியினை சனா வெளியிட்டுள்ளார். அந்தப்பகுதி, ஒவ்வொரு பாசிச ஆட்சிக்கும் ஒரு சமூகம் அல்லது குழு எவ்வாறு தேவைப்படுகிறது என்பதைப் பற்றி பேசுகிறது.

பாசிசம் என்பது ஒரு திட்டமிட்ட அணுகுமுறையாகும், இது ஒரு குழுவை அரக்கர்களாக்கிய பின் நிறுத்தாது. “வெறுப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு இயக்கம் தொடர்ந்து வெறுப்பையும் ச ண்டையையும் உருவாக்குவதன் மூலம் மட்டுமே தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்” என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் அவருடைய பதிவு 24 மணி நேரத்தை தாண்டுவதற்கு முன்னதாகவே நீக்கப்பட்டுவிட்டது. இதனை இணையதளவாசிகள் சிலர் தங்களுடைய பக்கத்தில் வெளியிட்டு, வெறும் 18 வயது மட்டுமே ஆன சனாவை பாராட்டி வருகின்றனர்.