உலக முடிவில் விழுந்த இளைஞனின் வாழ்வு முடிவு!!

722

World Endஉடுதும்பர, நவதகல பிரதேசத்தில் சிறிய உலக முடிவு என அழைக்கப்படும் மலையில் இருந்து கீழே விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (14) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நவதகல, ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.