மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த மீனின் தலை : பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

373

மூச்சுக்குழாயில்..

பல ஆண்டுகளாக நிமோனியா பாதிப்பால் அவ திப்பட்டுவந்த நோயாளியின் மூச்சுக் குழாயில் இருந்து மீன் ஒன்றின் தலை பகுதியை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையிலேயே கட்டார் நாட்டவரான நோயாளியின் மூச்சுக்குழாயில் இருந்து மருத்துவர்கள் மீன் தலையை அப்புறப்படுத்தியுள்ளனர்.

மூச்சுக்குழாயில் பல ஆண்டுகளாக இந்த மீன் தலையின் பாகம் சிக்கிக் கிடந்ததே, குறித்த நபருக்கு நிமோனியா பா திப்பு ஏற்பட காரணம் என மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

கட்டார் நாட்டில் குறித்த நபர் நிமோனியா தொடர்பில் சிகிச்சை மேற்கொண்டும் அங்குள்ள மருத்துவர்களால் மூச்சுக் குழாயில் சிக்கியுள்ள மீனின் தலையை கண்டறிய முடியவில்லை என கூறப்படுகிறது. தற்போது அந்த நபர் குணமடைந்து வருவதாகவும், இன்னும் சில நாட்கள் கண்காணிப்பில் இருப்பார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.