8 வயதில் 20 மில்லியன் பவுண்ட் சம்பாதித்த அமெரிக்க சிறுவன் : எப்படி தெரியுமா?

27


அமெரிக்க சிறுவன்


அமெரிக்காவை சேர்ந்த எட்டு வயது சிறுவன் யூ டியூப் நட்சத்திரங்களில் 2019-ஆம் ஆண்டு அதிகம் சம்பாதித்த நபர்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் Ryan Kaji. தற்போது 8 வயதாகும், இவர் தன்னுடைய 3 வயதிலே, அதாவது கடந்த 2015-ஆம் ஆண்டு யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தியுள்ளார், இந்த யூ டியூப் சேனலிற்கு அவருடைய தாய் மற்றும் தந்தை பெரிதும் உதவிகின்றனர்.


ஆரம்பத்தில் பெரிய அளவில் பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும், நாட்கள் செல்ல, செல்ல Ryan Kaji குழந்தைகள் விளையாடும் பொம்பைகளைப் பற்றியும், அதை எப்படி பயன்படுத்துவது? என்ன இருக்கிறது? போன்ற குழந்தைகளுக்கு தேவையானவற்றை கூறி வந்தால், சிறுவனின் வீடியோ வைரலானது.


இதனால் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த கொண்டே சென்ற நிலையில், தற்போது இவரின் யூ டியூப் சேனலை 23 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் பிரபல அமெரிக்க பத்திரிக்கையான போர்ப்ஸ் நிறுவனம், இந்த 2019-ஆம் ஆண்டில் யூ டியூப் மூலம் அதிகம் சம்பாதித்த நட்சத்திரங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதில் Ryan Kaji குறித்த ஆண்டில் மட்டும் 20 மில்லியன் பவுண்ட் சம்பாதித்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளது, கடந்த ஆண்டிலும் Ryan Kaji தான் முதலிடம் பிடித்தார். ஆனால் 2018-ஆம் ஆண்டில் இவரின் ஆண்டு வருமான யூ டியூப் மூலம் 17 மில்லியன் பவுண்டாக இருந்தது, தற்போது அது அதிகரித்துள்ளது.

இவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் Dude Perfect என்ற ஐந்து பேர் கொண்ட நண்பர்களின் யூ டியூப் சேனல் 15 மில்லியன் பவுண்டுடனும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவை சேர்ந்த 5 வயது சிறுவன் Nastya யூ டியூப் சேனல் 13.7 மில்லியன் பவுண்டும் சம்பாதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.