சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்த முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நியா செல்ல இருந்த இருவர் இன்று அதிகாலை விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 750 000 பெறுமதியான 355 கிராம் நிறையுடைய மூன்று தங்கத் தகடுகள் மீட்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் குறிப்பிட்டனர்.
மேலும் மலவாயிலில் மறைத்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்படடார்.
இவரிடம் இருந்து 203 கிராம் தங்க பிஸ்கட்கள் இரண்டு மீட்கப்பட்டது. அதன் பெறுமதி 150 000 ரூபா என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.




